- மீன்பிடி துறை
- கன்னியாகுமாரி
- கலைசெல்வன்
- மயிலாடி ஜோசப் புரம்
- அஞ்சுகிராமம்
- சோனி
- சாகர்மித்ரா
- கோவளம்
- மகாதானபுரம்
- ரவுண்டானாவில்
கன்னியாகுமரி, ஜன.22: அஞ்சுகிராமம் அருகே மயிலாடி ஜோசப் புரம் பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன். அவரது மகன் சோனி (26). மீன்வளத்துறையில் சாகர்மித்ரா பிரிவில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் பணி நிமித்தமாக கோவளத்திற்கு பைக்கில் புறப்பட்டார். மகாதானபுரம் ரவுண்டானா- கன்னியாகுமரி ஜீரோ பாயிண்ட் சாலையில் சிலுவை நகர் திருப்பத்தில் திரும்ப முயன்றபோது பின்னால் வேகமாக வந்த டாரஸ் லாரி பைக் மீது மோதியது. இதில் சோனி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் சோனியை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவர் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் டாரஸ் லாரியை வேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதாக தோவாளை அருகே பொட்டல் புதூர் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் கண்ணன் (39) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
