×

தூத்துக்குடி, தென்காசி, நெல்லையில் கடந்தாண்டு விஜிலென்ஸ் சோதனையில் 9 பேர் கைது

நெல்லை ஜன. 22: தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டும், வழக்கு பதிவு செய்தும் வருகின்றனர். கடந்த 2024ம் ஆண்டு 3 மாவட்டங்களிலும் சேர்ந்து லஞ்சம் தொடர்பான மொத்தம் 28 வழக்குகள் பதிவாகியிருந்தன. இந்நிலையில் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டங்களில் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் மொத்தம் 11 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதில் 4 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 4 ேபர் லஞ்சம் பெறும்போது கையும் களவுமாக சிக்கியுள்ளனர். பிற வழக்குகள் லஞ்ச ஒழிப்பு துறையினர் சர்ப்ரைஸ்ஆக ரெய்டு நடந்த சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் கணக்கில் வராத பணம் இருந்ததை பறிமுதல் செய்து, வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

இதுபோல தென்காசி மாவட்டத்தில் கடந்த ஆண்டு லஞ்சம் வாங்கி கையும் களவுமாக 6 பேர் சிக்கியுள்ளனர். அவர்கள் 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் லஞ்ச ஒழிப்புதுறையினர் ரெய்டு நடத்தி 3 வழக்குகள் என மொத்தம் 9 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக சிக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீதும், போலீசார் ரெய்டு நடத்தில் பல்வேறு அலுவலகங்களில் இருந்து கணக்கில் வராத பணத்தை கைப்பற்றிய சம்பவம் தொடர்பாக 11 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3 மாவட்டங்களிலும் சேர்ந்து லஞ்சம் வாங்கிய போது 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 3 மாவட்டங்களிலும் மொத்தம் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Tags : Thoothukudi ,Tenkasi ,Nellai ,Anti-Corruption and Corruption Surveillance Unit ,
× RELATED குடிநீருடன் கழிவுநீர் கலப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை