பணியிடங்கள் விவரம்:
1. பர்சனல் அசிஸ்டென்ட்: 1 இடம். வயது: 30க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் அறிவும், ஆங்கிலம் மற்றும் இந்தியில் சுருக்கெழுத்தில் எழுதி டைப்பிங் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் பேசும் திறமையும், 2 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
2. சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (கம்ப்யூட்டர்). 1 இடம். வயது: 35க்குள். தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்/எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ.,/ பி.டெக்., தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. செமி புரொபஷனல் அசிஸ்டென்ட்: 1 இடம். வயது: 32க்குள். தகுதி: நூலக அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் பாடத்தில் முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. அப்பர் டிவிசன் கிளார்க்: 2 இடங்கள். வயது: 32க்குள். தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. லேபரட்டரி அசிஸ்டென்ட்: 1 இடம். வயது: 32க்குள். தகுதி: இயற்பியல்/வேதியியல்/மைக்ரோபயாலஜி பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. லோயர் டிவிசன் கிளார்க்: 5 இடங்கள். வயது: 32க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஒரு நிமிடத்தில் இந்தியில் 30 வார்த்தைகள், ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள் டைப்பிங் செய்யவும், கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
7. இந்தி டைப்பிஸ்ட்: 1 இடம். வயது: 32க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் இந்தியில் டைப்பிங் செய்ய வேண்டும். கம்ப்யூட்டர் அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
8. பல்நோக்கு பணியாளர்: 1 இடம். வயது: 32க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.750/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி யினருக்கு கட்டணம் கிடையாது.
https://cutn.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் நாளை: 22.01.2026
