தேனி, ஜன. 21: தேனி அருகே சிவலிங்க நாயக்கன்பட்டி கிராமத்தை ராம்குமார்(31). ராம்குமார் விவசாய கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் ராம்குமாரும் அவரது தாயாரும் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் திடீரென எழுந்த ராம்குமார் வீட்டு அறைக்குள் சென்று கதவை தாளிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழனி செட்டிபட்டி போலீசில் இறந்து போன வாலிபரின் தந்தை பழனிச்சாமி அளித்த புகாரில், சிறிது காலமாக ராம்குமார் மனநிலை பாதிக்கப்பட்ட காணப்பட்டதாகவும், எவ்வித சந்தேகமும் இல்லை என புகார் மனுவில் தெரிவித்து இருந்தார் . இதனைத் தொடர்ந்து போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
