×

631 பவுன் அடகு நகை மோசடி: 6 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரை, ஜன. 21: மதுரை, மேலக்கால் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பிரேம்சந்தர்(58). இவர் கோச்சடையில் நடத்தும் மினரல் வாட்டர் தொழிலை விரிவுபடுத்த, அவரது மனைவி ஜீவா, மகள் டாக்டர் பிரியங்கா ஏஞ்சலின் ஆகியோரின் 109 பவுன் நகைகளை, பல்வேறு வங்கிகளில் அடகு வைத்திருந்தார். இதற்கிடையே அவருக்கு மேலும் பணம் தேவைப்பட்டதால், அடகு கடை நடத்தும் புதுஜெயில் ரோட்டை சேர்ந்த ராஜசேகர்(65), கே.புதூரை சேர்ந்த வெங்கடேஷ்(38), காமராஜர் சாலையை சேர்ந்த தோடுவெங்கடேஷ்(33) ஆகியோரை அணுகினார்.

அவர்கள் குறைந்த வட்டிக்கு கூடுதல் பணம் தருவதாக தருவதாக கூறியதால், கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி 25 பவுன் நகைகளை அவர்களிடம் அடகு வைத்துள்ளார். இதேபோல் அடுத்தடுத்து பல்வேறு தவணைகளில் 606 பவுன் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அடகு நகைகளை திருப்பிக்கொள்வதாக ராஜசேகரிடம் கூறியுள்ளார். ஆனால் நகைகளை உருக்கிவிட்டதாகவும், திரும்ப கேட்டால் கொலை செய்து விடுவேன் என்றும் ராஜசேகர் மிரட்டியுள்ளார். இதற்கு மற்றவர்களும் ஆதரவாக இருந்துள்ளனர். இதுகுறித்த அவரது புகாரின் பேரில் ராஜசேகர், வெங்கடேஷ் உள்ளிட்ட 6 பேர் மீதும் எஸ்எஸ் காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Madurai ,Premchandar ,Melakkal Main Road, Madurai ,Kochadai ,Jeeva ,Dr. ,Priyanka Angeline ,
× RELATED குடிநீருடன் கழிவுநீர் கலப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை