×

அனுமந்தராயன்கோட்டையில் புதிய நிழற்குடை கட்ட கோரிக்கை

ரெட்டியார்சத்திரம், ஜன.21: ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் அனுமந்தராயன்கோட்டை லயோலா மேல்நிலைப்பள்ளி முன்பு பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் கடந்த 2013ல் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. ஆனால் உரிய பராமரிப்பில்லாததால் இந்த நிழற்குடை தற்போது மிகவும் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது. இதனால் இந்த நிழற்குடையில் அமர்வதற்கு அச்சமடைந்து திறந்தவெளியில் பஸ்சுக்காக பயணிகள் காத்திருக்கின்றனர். இதன் காரணமாக பயணிகள் வெயில் மற்றும் மழையில் நனைந்தபடி நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.

இதனால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பயணிகள் நலன் கருதி, சேதமடைந்த நிலையில் உள்ள இந்த நிழற்குடையை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக நிழற்குடையை கட்டி தர வேண்டும் என அனுமந்தராயன் கோட்டை ஊராட்சி நிர்வாகத்தினருக்கு, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Anumantharayankottai ,Reddyarchathiram ,Loyola Higher Secondary School ,Reddyarchathiram Union ,
× RELATED குடிநீருடன் கழிவுநீர் கலப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை