×

உங்க கனவ சொல்லுங்க திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் கருத்து கேட்பு

ரெட்டியார்சத்திரம், ஜன.21: உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தின் கீழ் கே.புதுக்கோட்டையில் தன்னார்வலர்கள், பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்து வருகின்றனர்.தமிழ்நாடு அரசின் ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தின் கீழ், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கே.புதுக்கோட்டை ஊராட்சியில் தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்து வருகின்றனர்.

இதில் மகளிர் குழுவைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ரெங்கநாயகி, பாண்டியம்மாள், யுவராணி, ஆகியோர் கே.புதுக்கோட்டை ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு வீடாக சென்று குடியிருப்புவாசிகளிடம், அவர்களது கருத்துக்களை குறிப்பு எழுதுவதற்கான படிவங்களை விநியோகம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு தன்னார்வலர்களும் தினமும் 30 வீடுகள் முதல் 50 வீடுகள் வரை நேரில் சென்று இத்திட்டத்தின் கீழ் மக்களை சந்தித்து வருகின்றனர். அவர்களுடன் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் எ.ஆர்.கே.ரமேஷ் இணைந்து பணியாற்றி வருகிறார்.

Tags : Retiarsatram ,Pudukkota ,NADU ,RETIYARCATRAM ,UNIYAM K. Volunteers ,Pudukkottai Uratchi ,
× RELATED குடிநீருடன் கழிவுநீர் கலப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை