கடையநல்லூர், ஜன.21: புளியங்குடி உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவில் விடிய விடிய வாகன சோதனை நடத்தியதில் 400க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தென்காசி மாவட்டத்தில் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில் நேற்று இரவில் மாவட்டத்தில் உள்ள தென்காசி, ஆலங்குளம், சங்கரன்கோவில், புளியங்குடி உட்கோட்ட பகுதிகளில் விடிய விடிய வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
