×

தட்டார்மடத்தில் இன்று நடக்கவிருந்த பாஜ மறியல்: போராட்டம் வாபஸ்

சாத்தான்குளம், ஜன. 21: செட்டியார்பண்ணையில் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தட்டார்மடத்தில் பாஜ சார்பில் இன்று (21ம் தேதி) நடக்கவிருந்த மறியல் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையை அடுத்து வாபஸ் பெறப்பட்டது. சாத்தான்குளம் அருகே உள்ள செட்டியார்பண்ணையில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க ஏற்பாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது. கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மதுக்கடை அமைக்க கூடாது என்று வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் மதுபான கடை அமைக்கப்பட்டால் ஜன.21ம் தேதி தட்டார்மடம் பஜாரில் நடத்தப்படும் என ஒன்றிய பாஜ சார்பில் அறிவிக்கப்பட்டு சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு இருந்தது. இந்த போராட்டம் தொடர்பான சமாதான பேச்சுவார்த்தை, சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் இசக்கி முருகேஸ்வரி தலைமையில் நேற்று நடந்தது. தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் அனிதா, போராட்டக் குழு சார்பில் பாஜ மாவட்ட துணை தலைவர் செல்வராஜ், ஒன்றிய பாஜ தலைவர் சரவணன், மாவட்ட பிரசார பிரிவு துணை தலைவர் ஜோசப், மாவட்ட அமைப்புசாரா பிரிவு துணை தலைவர் ராம்மோகன், ஒன்றிய பாஜ செயலாளர் கள்பொன்ராஜகோபால், மங்கையர்கரசி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் உஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இதுதொடர்பாக கருத்துருக்கள் தூத்துக்குடி கலெக்டருக்கு தெரிவித்து, செட்டியார்பண்ணையில் மதுக்கடை அமைப்பது நிறுத்தப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன் பேரில் இன்று (21ம் தேதி) நடக்கவிருந்த போராட்டத்தை கைவிடுவதாக போராட்ட குழுவினர் தெரிவித்தனர்.

Tags : BJP ,Thattarmadam ,Sathankulam ,Chettiarpanna ,TASMAC ,Sathankulam… ,
× RELATED குடிநீருடன் கழிவுநீர் கலப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை