×

மும்பையில் மாயமான மகனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: கலெக்டரிடம் தந்தை கோரிக்கை

நாகர்கோவில், ஜன. 21: குமரி மாவட்டம் பள்ளம் வடக்குத்தெருவை சேர்ந்த சேவியரின் மகன் மேக்ஸி மிலன் மும்பையில் உள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வேலை செய்துவருகிறார். மேக்ஸி மிலன் வேலை செய்த இடத்தில் இருந்து மாயமாகியுள்ளார். இந்த நிலையில் அவரது தந்தை சேவியர், பள்ளம் பங்குதந்தை சகாய ஆன்றனி, கடலோர அமைதி வளர்ச்சி குழும இயக்குநர் டன்ஸ்டன் ஆகியோருடன் சென்று நேற்று கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது மகன் மேக்ஸி மிலன்(23).

மும்பையில் உள்ள டெல்டா ரெக்கோ என்ற நிறுவனத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வேலைக்கு சேர்ந்தார். கடந்த 18ம் தேதி என்னை தொடர்பு கொண்ட ஒருவர், உங்களது மகன் வேலை செய்யும் இடத்தில் காணவில்லை என தெரிவித்தார். மேலும் அவர்கள் வழக்கு பதிவு செய்து எனது மகனை தேடி கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர். எனது மகனுக்கு என்ன நடந்தது என தெரியாமல் அச்சத்தில் உள்ளோம். எனவே எனது மகனுக்கு என்ன நடந்தது என விசாரிப்பதுடன், அவனை கண்டுபிடித்து தர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Mumbai ,Nagercoil ,Maxi Milan ,Xavier ,Pallam Vadakkuththeru ,Kumari district ,
× RELATED குடிநீருடன் கழிவுநீர் கலப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை