டமாஸ்கஸ்: சிரியாவின் வட கிழக்கு பகுதியை தங்களுடைய கட்டுப்பாட்டில் எடுப்பதற்காக குர்துகள் தலைமையிலான எஸ்டிஎப் படையினருடன் சிரிய ராணுவம் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளது.இந்த சண்டையின் போது ஷடாடே சிறைசாலையில் இருந்து 120 ஐஎஸ் தீவிரவாதிகள் தப்பி ஓடி விட்டனர். அதில் 81 பேர் பாதுகாப்பு படையினரிடம் பிடிபட்டனர். தப்பி ஓடிய தீவிரவாதிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என்று சிரிய உள்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது. சிரியாவில் ஐஎஸ்க்கு எதிராக தாக்குதல் நடத்திய அமெரிக்க ஆதரவு பெற்ற எஸ்டிஎப் 12 க்கும் மேற்பட்ட சிறைகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதில்,9000க்கும் மேற்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகள் பல ஆண்டுகளாக விசாரணையின்றி அடைக்கப்பட்டுள்ளனர்.
