மதுரை: உடல் பருமனை குறைப்பதற்காக யூடியூப் பார்த்து வெண்காரம் வாங்கி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்தார். மதுரையில் கல்லூரியில் முதலாமாண்டு பயின்ற செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த கலையரசி (18) உயிரிழந்தார். நாட்டு மருந்துக் கடையில் வெங்காரம் வாங்கி சாப்பிட்டவுடன் வாந்தி, பேதி ஏற்பட்டு உடல்நிலை பாதிப்படைந்து உயிரிழந்தார்.
