தஞ்சாவூர்: ஜல்லிக்கட்டு போட்டி தடைக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. கும்பகோணத்தில் கடந்த 20.1.2017ம் தேதி நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில், திமுகவை சேர்ந்த தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் தலைமையில் திமுகவினர் பங்கேற்றனர். இதுதொடர்பாக கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார், அமைச்சர் கோவி.செழியன், மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணந்தரம், எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், நகர்மன்ற துணை தலைவர் சுப.தமிழழகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்குகளை விசாரிக்கும் தஞ்சை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதற்காக அமைச்சர் கோவி.செழியன், எம்பி கல்யாணசுந்தரம், எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், நகர்மன்ற துணை தலைவர் சுப.தமிழழகன் ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி கனிமொழி, 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
