வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக டில்லிபாபு மீண்டும் தேர்வு

 

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் சரிவர செயல்படாத மாவட்ட தலைவர்கள் மற்றும் நீண்ட காலமாக தலைவர் பதவியில் இருந்தவர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். இதைத் தொடர்ந்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 71 மாவட்டத் தலைவர்களின் பட்டியல் குறித்து நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அறிவிப்பு வெளியானது. இதன்படி, சென்னையில் வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெ.டில்லிபாபு மட்டும் மீண்டும் 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதில் பிற மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட்டு உள்ளனர்.

வடசென்னை மேற்கு மாவட்டத் தலைவராக ஏற்கெனவே கடந்த 5 ஆண்டுகளாக ஜெ.டில்லிபாபு இருந்தபோது, அவரது கட்சி செயல்பாடுகள் மற்றும் இதர பணிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அவருக்கு மீண்டும் 2வது முறையாக வடசென்னை மேற்கு மாவட்டத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை இன்று காலை அவரது இல்லத்தில் வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் ஜெ.டில்லிபாபு சந்தித்து நன்றி தெரிவித்தார். இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Related Stories: