சென்னை: சென்னை கடற்கரைப் பகுதிகளில் ஜன. 14 முதல் 16 வரை 160.83 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன என சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மெரினா கடற்கரையில் 116.17 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம். பொங்கலை முன்னிட்டு கடற்கரைப் பகுதிகளில் மக்கள் அதிகளவில் கூடிய நிலையில் 160 டன் திடக்கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டது.
