மராட்டிய மாநிலம் மும்பை மாநகராட்சியில் நடந்த தேர்தலில் பாஜக கூட்டணி முன்னிலை

 

மும்பை: மராட்டிய மாநிலம் மும்பை மாநகராட்சியில் நடந்த தேர்தலில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மொத்தம் உள்ள 227 வார்டுகளில் 117 இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மும்பை மாநகராட்சியை 30 ஆண்டுகளாக தன் வசம் வைத்திருந்த சிவசேனா 69 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 12 வார்டுகளிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

Related Stories: