×

தமிழர் திருநாளில் தமிழர் வாழ்வு செலுத்திட வாழ்த்துகிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கிடும் இந்த மகிழ்ச்சிப் பொங்கல் திராவிட மாடல் 2.0.ல் பன்மடங்காகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; “புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கலெனப் பொங்கிட, இனித்திடும் செங்கரும்பைச் சுவைத்து, செங்கதிரோனைப் போற்றிடும் தமிழர் திருநாளில், தமிழர் வாழ்வு செழித்திட வாழ்த்துகிறேன்!

தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கிடும் இந்த மகிழ்ச்சிப் பொங்கல், திராவிட மாடல் 2.0-வில் பன்மடங்காகும்! ” என பதிவிட்டுள்ளார்.

Tags : Tamil Nadu ,Chief Minister ,MLA K. Stalin ,Chennai ,Pongal ,Mu. K. Stalin ,X ,
× RELATED கதிரவன் கருணையால் உங்கள் இல்லத்தில்...