டெல்லியில் இன்று காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மாநாடு

 

புதுடெல்லி: டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சம்விதான் சதனின் மைய மண்டபத்தில் 28வது காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் தலைமை அதிகாரிகள் மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேச உள்ளார். மாநாட்டிற்கு மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தலைமை வகிப்பார்.

உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 42 காமன்வெல்த் நாடுகள், பகுதி அளவிலான தன்னாட்சி அதிகாரம் பெற்ற 4 நாடாளுமன்றங்கள் ஆகியவற்றை சேர்ந்த 61 சபாநாயகர்கள் இதில் கலந்து கொள்வார்கள். வலுவான ஜனநாயகத்தை பராமரிப்பதில் சபாநாயகர்களின் பங்கு, நாடாளுமன்ற செயல்பாட்டில் ஏஐ பயன்பாடு, நாடாளுமன்றம் குறித்த பொதுமக்களின் புரிதலை மேம்படுத்துவதற்கான புதிய உத்திகள், வாக்களிப்பதை தாண்டி மக்களின் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்படும்.

Related Stories: