கேரளா: சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தையொட்டி பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மண்டல மகர ஜோதி தரிசனம் இன்று மாலை நடைபெற உள்ளது. பிற்பகல் 3 மணிக்கு மகர பல்லாண்டு பூஜையும் நடைபெறுகிறது. இதனை அடுத்து சபரி மலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட மலைப்பகுதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.
சுமார் 4 லட்சத்துக்கு மேலான பக்தர்கள் சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை காண தேவசம்போடு அறிவித்த நிலையில் தற்போது பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சந்தன பேழையை ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு பம்பையை வந்தடையும். இதனை அடுத்து இரவு 10 மணிக்கு மேல் மும்பையிலிருந்து மலையேற சென்ற பக்தர்களுக்கு அனுமதியும் மறுக்கப்பட்டது.
அதே போல் 3 மணிக்கு மகரசங்கராந்தி பூஜையானது நடைபெற உள்ளது. இன்று 30 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே சன்னிதானத்தில் தரிசனம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது அனுமதிக்கப்பட்ட மலை உச்சிகளை தவிர மற்ற பகுதிகளில் தற்காலிக குடில் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குடில்களில் சமையல் செய்யவும் தடைவிதிக்கப்பட்டது. 1500 க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்புப்படை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
சபரிமலை சுற்றுவட்டார பகுதிகளில் மகரஜோதி தரிசனத்திற்காக 4 லட்சத்திற்கு மேலான பக்தர்கள் குவிந்துள்ளனர். இவர்களுக்கான உணவு வசதிகள் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே போல் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும். 50க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் பம்பை பகுதியில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேவசம்போடும், கேரள அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
