டெல்லி: பொங்கல் திருநாளை முன்னிட்டு தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மனிதனின் உழைப்பு, இயற்கையின் இசைவுக்கு இடையே உள்ள நெருங்கிய தொடர்பை பொங்கல் பண்டிகை நினைவூட்டுகிறது. வேளாண்மை, நமது விவசாயிகள் ஆகியவற்றுடன் பொங்கல் பண்டிகை ஆழமாக பிணைந்துள்ளது. வளமான தமிழ் பாரம்பரியங்களின் உன்னதமான அடையாளமாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது எனவும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
