×

பரிபூர்ணாஸ் ஷெல்ட்ர்ஸ் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் பரிசு, மளிகை பொருள் விநியோகம்

 

தொண்டாமுத்தூர், ஜன.14: பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, கோவை மாதம்பட்டி அருகே குப்பனூரில் உள்ள பரிபூர்ணாஸ் ஐஸ்வர்யம் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், ஆண்டு தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் பரிசு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும், 110 மாற்றுத்திறனாளிகளுக்கு, பொங்கல் பரிசு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. கோவை மாவட்டத்தை சேர்ந்த 110 மாற்றுத்திறனாளிகள், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, பொங்கல் பரிசு மற்றும் 15 நாட்களுக்கு தேவையான மளிகை பொருட்களை, பரிபூர்ணா ஷெல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் மாதம்பட்டி கே. தங்கவேல் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் ஆகியோர் வழங்கினர். முடிவில், கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் கே.ரவி நன்றி கூறினார்.

Tags : Paripurnas Shelters ,Pongal ,Thondamuthur ,Paripurnas Aishwaryam Apartment Complex ,Kuppanur ,Madampatti, Coimbatore ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது