பொங்கல் பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்கள் மூலம் 2.72 லட்சம் பேர் பயணம்

சென்னை: ஆம்னி பேருந்துகள் மூலம் 2.72 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொங்கல்பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களுக்கு ஆம்னி பேருந்துகள் கடந்த 9ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் கடந்த 9ம் தேதி 1,230 பேருந்துகளில் 49,200 பயணிகளும், 10ம் தேதி 1,100 பேருந்துகளில் 44,000 பயணிகளும், 11ம் தேதி 1,180 பேருந்துகளில் 47,250 பயணிகளும், 12ம் தேதி 1,450 பேருந்துகளில் 58,000 பயணிகளும், 13ம் தேதி 1,860 பேருந்துகளில் 74,400 பயணிகளும் என ஒட்டுமொத்தமாக 2,72,850 பயணிகள் பொங்கலையொட்டி சொந்த ஊர் சென்றுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related Stories: