அரசியல் கட்சி தலைவர்கள் பொங்கல் வாழ்த்து

 

சென்னை: அரசியல் கட்சி தலைவர்கள் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில், தமிழக மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்: மதவாத, சாதி வெறி, சமூக விரோத பிற்போக்கு சக்திகளை முற்றாக நிராகரித்து, மதச்சார்பற்ற முற்போக்கு கருத்துக்களுக்கு வலுவூட்டி சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற, தை திருநாளில் உறுதி ஏற்போம்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், வாழ்வில் முன்னேற தைத்திருநாள் நல்வழிகாட்ட பொங்கல் வாழ்த்துகள்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்: உலகத் தொழில் அனைத்திற்கும் அச்சாணியாகத் திகழும் உழவுத் தொழிலையும், அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் உழவர் பெருமக்களின் நலனையும் பேணிக்காத்திட நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம். இதேபோல், சமக தலைவர் எர்ணாவூர் நாராயணன் பொங்கல் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

Related Stories: