தொழிலாளர் அமைச்சகம் தலையிட்டதால் 10 நிமிட டெலிவரி திட்டத்தை கைவிட்டது பிளிங்கிட்: ஸ்விக்கி, ஜெப்டோவும் பின்பற்ற வாய்ப்பு

 

புதுடெல்லி: 10 நிமிட டெலிவரி திட்டம் தற்போது சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் அதிகரித்து வருகிறது. பல ஆன்லைன் தளங்கள் இதை ஒவ்வொரு நகரம் வாரியாக அமல்படுத்தி வருகின்றன. 10 நிமிட டெலிவரி என்ற வாக்குறுதியை எதிர்த்து ஆன்லைன் தளங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் செய்தனர்.

இந்த பிரச்னை தொடர்பாக ஒன்றிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த வாரம் டெலிவரி ஒருங்கிணைப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து ஒன்றிய அரசு வழங்கிய அறிவுறுத்தலை தொடர்ந்து 10 நிமிட டெலிவரி திட்டத்தை பிளிங்கிட் கைவிட்டுள்ளது.

அந்த தளத்தில்,’ 10 நிமிடங்களில் 10,000+ தயாரிப்புகள் டெலிவரி செய்யப்படுகின்றன’ என்ற வாசகம் மாற்றப்பட்டு ‘30,000+ தயாரிப்புகள் உங்கள் வீட்டு வாசலில் டெலிவரி செய்யப்படுகின்றன’ என்று திருத்தப்பட்டுள்ளது. இதேபோன்று ஜெப்டோ, ஜொமாட்டோ மற்றும் ஸ்விக்கி உள்ளிட்ட முன்னணி தளங்களும் மாற்றும் வாய்ய்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: