×

ஆண்களை விட பெண்கள் மிகவும் திறமையானவர்கள், தொலைநோக்கு சிந்தனை கொண்டவர்கள்: ராகுல் காந்தி

உதகை: ஆண்களை விட பெண்கள் மிகவும் திறமையானவர்கள், தொலைநோக்கு சிந்தனை கொண்டவர்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பெண்கள் இன்னும் பலதுறைகளில் பெரும் பங்களிப்பை வழங்க வேண்டும். எனது பாட்டி இந்திரா காந்தியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். பள்ளி பருவத்தில் நான் மிகவும் குறும்புக்கார சிறுவனாக இருந்தேன். விடுதியில் தங்கி படித்தாலும் மகிழ்ச்சியாக இருந்தேன்; ஆனால் மகிழ்ச்சியாக இல்லை என பெற்றோரிடம் கூறினேன். பெற்றோரை அடிக்கடி வர வைப்பதற்காக நான் மகிழ்ச்சியாக இல்லை என்று கூறினேன். நான் ஆசிரியர்களால் கையாள கடினமான மாணவனாகவே இருந்தேன் என்றும் தெரிவித்தார்.

Tags : Rahul Gandhi ,Indira Gandhi ,
× RELATED இது தகவல்கள் எளிதாக கிடைக்கும் காலம்:...