- கொடைக்கானல்
- கொடைக்கானல் வின்சென்ட் ஆட்டோ கேரேஜ்
- டிரிப்ளின் என் குழு
- கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளி
*சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்
கொடைக்கானல் : கொடைக்கானலில் முதல் முறையாக பழமையான கார்கள் கண்காட்சி நடந்தது. கொடைக்கானல் வின்சென்ட் ஆட்டோ கேரேஜ், ட்ரிப்பில் என் குரூப் நிறுவனங்கள் சார்பில் கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் முதல் முறையாக பழமையான கார்கள் கண்காட்சி நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் 60க்கும் மேற்பட்ட பழமையான கார்கள் இடம் பெற்றன. 1936ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஆஸ்டின் கார், 1954ம் ஆண்டு உருவாக்கப்பட்ட வில்லிஸ் ரக ஜீப்புகள். உள்ளிட்டவை இந்த கண்காட்சியில் இடம்பெற்றன.
1950ம் ஆண்டு உற்பத்தியான ஏ.ஜே.எஸ் டூவீலர், தற்போது புழக்கத்தில் இல்லாத எஸ் டி, மினி புல்லட், உள்ளிட்ட டூவீலர்களும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றது. இந்த கண்காட்சியில் மறு வடிவமைப்பும் செய்யப்பட்ட ஜீப்புகள், மற்றும் கார்களும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த பழமையான கார்கள் கண்காட்சியை கொடைக்கானல் முன்னாள் நகர் மன்ற தலைவர் டாக்டர் கே சி ஏ குரியன் ஆபிரகாம், கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த பழமையான கார்கள் கண்காட்சியில் இடம்பெற்ற பழமையான கார்களையும், இரு சக்கர வாகனங்களையும், மறு வடிவமைப்பு செய்யப்பட்ட கார்களையும் இரு சக்கர வாகனங்களையும் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் கண்டு ரசித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
இந்த கண்காட்சியில் தங்களது கார்களையும் இருசக்கர வாகனங்களையும் காட்சிப்படுத்திய வாகன உரிமையாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
