அகரம், பாலவாக்கம் பகுதிகளில் பொங்கல் விற்பனைக்கு தயாரான பானைகள், மஞ்சள் கொத்துகள்

 

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே அகரம், ஆரணியருகே பாலவாக்கம் கிராமங்களில் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ள பானைகள் மற்றும் மஞ்சள் கொத்துக்கள் பொங்கல் விற்பனைக்கு மாண்பாண்ட தொழிலாளர்கள், விவசாயிகள் தயாராகி வருகின்றனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாப்பட உள்ளது. அப்போது, தமிழர்கள் பொங்கல் பண்டிகையை புத்தாடை அணிந்து மண் பானையில் பச்சரிசி பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுவார்கள்.

இந்நிலையில், பொங்கல் வைத்து வழிபட தேவையான மண் பானைகளை தயார் செய்யும் பணிகளில் பெரியபாளையம் அருகே அகரம், செம்பேடு, ஆரணி, தண்டலம், பாலவாக்கம் மற்றும் ஊத்துக்கோட்டை கலைஞர் தெரு, பேருந்து நிலையம் எதிரிலும், ஊத்துக்கோட்டை அருகே புதுகுப்பம் போன்ற பகுதிகளிலும் மண்பாண்ட தொழிலாளர்கள் பொங்கலுக்காக மண்பானைகள் செய்து அதற்கு வர்ணம் பூசி விற்பனைக்கு தயாரான நிலையில் பொங்கல் பானைகளை வைத்துள்ளனர்.

இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது: நாங்கள் 30 வருடங்களுக்கும் மேலாக இந்த மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம். மேலும், பொங்கல் பானைகள் செய்து அதற்கு வர்ணம் பூசி அதை உலர்த்தும் பணிகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். தற்போது, ஒரு பானையின் விலை ₹50 முதல் ₹200 வரை விற்பனையாகும். இந்த பானைகளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து வாங்கிச்செல்வார்கள் என கூறினர்.

இதேபோல், ஆரணி அருகே பாலவாக்கம், ஆர்.என்.கண்டிகை ஆகிய பகுதிகளில் பொங்கலுக்காக விற்பனைக்கு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு எடுத்துச்செல்வதற்கு மஞ்சள் கொத்துக்கள் அறுவடை செய்து விற்பனைக்காக கட்டுபோட்டு அடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

Related Stories: