- மும்பை மாநகராட்சி
- மும்பை
- மகாராஷ்டிரா
- Sivasena
- பாஜக
- அஜித்பவர் தேசியவாத காங்கிரஸ்
- அக்நாத் ஷிண்டே
- மகாயுதி கூட்டணி
- பாரிஸ்
- மகா யூதி
மும்பை: மஹாராஷ்டிராவில் 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. பாஜக, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் மகாயுதி கூட்டணியாக இத்தேர்தலை சந்திக்கின்றனர். இந்த நிலையில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மும்பை மாநகராட்சிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி சட்டவிரோதமாக குடியேறியவர்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கண்டறிதல் ஏ.ஐ வசதியுடன் சேவைகளை விரைவாக வழங்குவது. மொபைல் போன்கள் வழியாக புகாரளிக்கும் வசதி உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.
பெண்களை கவரும் விதமாக ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன். பேருந்து கட்டணத்தில் 50 சதவீத சலுகை போன்ற வாக்குறுதிகளும் கவனம் பெற்றுள்ளன. அதே போல் 10 ஆயிரம் மின்சாரம் பேருந்துகள் வரை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனவும் மகாயுதி கூட்டணி தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான மும்பை விகாஸ் அகாதி கூட்டணியில் ராஷ்டிரிய சமாஜ் கட்சி, இந்திய குடியரசு கட்சி உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன. காங்கிரஸ் கூட்டணியின் வாக்குறுதிகள் சுகாதாரம், மருத்துவம், கல்வி, தூய்மையான குடிநீர் என மக்களின் அடிப்படை தேவைகளை கொண்டே அமைந்துள்ளது.
அரசு பள்ளிகளின் கட்டமைப்பு மேம்படுத்தப்படும். மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் ஸ்கேன் வசதி 2 புதிய பன்னோக்கு மமருத்துவமனைகள், பழைய அரசு கட்டடங்கள் மற்றும் குடியிருப்பு கட்டடங்களை புதுப்பித்தல் உள்ளிட்ட வாக்குறுதிகள் காங்கிரஸ் கூட்டணி தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. பணிக்கு செல்லும் பெண்கள் தங்களது குழந்தைகளை விட்டு செல்லும் வகையில் வார்டு தோறும் குழந்தைகள் காப்பகம் அமைக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே 20 ஆண்டுகளுக்கு பிறகு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் கைகோர்த்துள்ளனர். இந்த கூட்டணி சார்பில் வீட்டுவேலை செய்யும் பெண்கள் மற்றும் மீனவ சமுக பெண்களுக்கு மாதம் ரூ.1500, ரூ.10க்கு காலை மற்றும் மதிய உணவு வழங்கும் உணவகங்கள். பெருந்து கட்டணம் குறைப்பு, மின்சார பைக்குகள் வாங்க ரூ.25,000 வட்டியில்லா கடன் உள்ளிட்ட வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
