வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை : சென்னை நந்தம்பாக்கத்தில் அயலக தமிழர் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், ” நாம் யாராலும் பிரிக்க முடியாத சொந்தங்கள், இது பல்லாண்டு கால
சொந்தம். கடல் நம்மை பிரித்தாலும் மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது. 70 நாடுகளில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் தமிழர்கள் வந்திருக்கிறார்கள். நாம் அனைவரும் தமிழ் சொந்தங்கள், தமிழின சொந்தங்கள். வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை.”இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: