சென்னை: ஜனவரி 9 முதல் 11ம் தேதி வரை இயக்கப்பட்ட 8270 பேருந்துகளில் 3,58,496 பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வழக்கமான பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. நேற்று இயக்கப்பட்ட 668 சிறப்பு பேருந்துகள் உள்பட மொத்தம் 2,760 பெருங்களில் 1,11,316 பேர் பயணம் மேற்கொண்டனர்.
