ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை பணப்பாக்கத்தில் ரூ.9,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு வரும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் ஆலையில், பிப்ரவரி 9ம் தேதி முதல் தயாரிப்பைத் தொடங்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 2024 செப்டம்பரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய நிலையில், 16 மாதங்களில் தயாரிப்பு தொடங்கவுள்ளது. இந்த ஆலை மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன.
ராணிப்பேட்டை கார் தொழிற்சாலையில் பிப்ரவரியில் உற்பத்தியை தொடங்குகிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்!!
- டாடா மோடர்ஸ் நிறுவனம்
- ரானிபெட் கார் தொழிற்சாலை
- Ranipettai
- டாடா மோட்டார்ஸ்
- ஜாகுவார் லேண்ட் ரோவர்
- ராணிப்பேட்டை
