×

வேந்தர் சீனிவாசன் வழங்கினார் கலெக்டர் தகவல் பெரம்பலூர் ஒன்றிய பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000, பொங்கல் தொகுப்பு

பெரம்பலூர், ஜன.12: பெரம்பலூர் எம்.பியான கே.என்.அருண்நேரு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ3000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினார். பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேலூர் ஊராட்சி தம்பிரான்பட்டி கிராமம், பெரம்பலூர் நகராட்சி ஆலம்பாடி சாலையிலுள்ள தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்திலும் உள்ள நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா ரூ.3000 ரொக்கத்துடன்கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை பெரம்பலூர் எம்பி கே.என்.அருண்நேரு, கலெக்டர் மிருணாளினி தலைமையில், எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பொங்கல் பண்டிகையை பொது மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக நியாயவிலை கடைகளில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 2026ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.3,000 ரொக்கம் வழங்க உத்தரவிட்டுள்ளார். அதனுடன் வேட்டி சேலைகளும் வழங்கப்படுகின்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் 282 நியாய விலைக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள 1,93,921 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகின்றது. இதில்
பெரம்பலூர் வட்டத்தில் 53,030 குடும்ப அட்டைதாரர்களுக்கும், வேப்பந்தட்டை வட்டத்தில் 51,666 குடும்ப அட்டை தாரர்களுக்கும், வேப்பூர் வட்டத்தில் 52,721 குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஆலத்தூர் வட்டத்தில் 36,504 குடும்ப அட்டைதாரர்களுக்கும் என மொத்தம் 1,93,921 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. இதன் மூலம் 1,93,921 குடும்பங்களை சேர்ந்த 5,83,294 நபர்கள் பயன் பெறுவார்கள்.

இந்நிலையில், பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேலூர் ஊராட்சி தம்பிரான் பட்டி கிராமத்திலும், பெரம்பலூர் நகராட்சியில் ஆலம்பாடி சாலையில் உள்ள தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்திலும் உள்ள நியாய விலைக்கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை பெரம்பலூர் எம்பி கே.என்.அருண்நேரு பார்வையிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கிபொது அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அப்போது, குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும், தங்களுக்கு 3000ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு தங்களது நன்றியைத் தெரிவிக்க வேண்டும் என பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேட்டுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், பெரம்பலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் அனிதா, அட்மா தலைவர் ஜெகதீசன், முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார், நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், கூட்டுறவு சரக துணைப் பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) சிவக்குமார், நகராட்சிக் கவுன்சிலர் சிவக்குமார், பெரம்பலூர் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், திமுக மாவட்ட பிரதிநிதி பிரபு, தம்பிரான்பட்டி கிளைச் செயலாளர் சாம்குமார், பெரம்பலூர் நகர துணைச் செயலாளர் சபியுல்லா, மாவட்ட இளைஞர் அணி துணைஅமைப்பாளர் அப்துல் கரீம், அழகு நீலமேகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Vendar Srinivasan ,Perambalur ,K.N. Arunnehru ,Pongal ,Thambiranpatti ,Vellore panchayat ,
× RELATED புதுநடுவலூர் கிராம மக்களுக்கு ரூ.10 லட்சத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு