பெரம்பலூர், ஜன.10: சமவேலைக்கு சமஊதியம் வழங்கிடக்கோரி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் SSTA சார்பாக கடந்த டிசம்பர் மாதம் 26ஆம்தேதி முதல் சம வேலைக்கு சமஊதியம் வழங்கிடக்கோரி சென்னையில் ஊதிய மீட்புப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதற்கான தீர்வுகள் இதுவரை எட்டப் படாததால் 5ம்தேதி முதல் சென்னை மட்டுமன்றி அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் முன்பும் காத்திருப்புப் போராட்டமாக நடத்தத்திட்ட மிடப்பட்டது. இதன்படி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு 5ம்தேதி பெரம்பலூர் மாவட்ட இடை நிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக தொடங்கிய காத்திருப்புப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிது.
இந்தக் காத்திருப்புப் போராட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டத் தலைவர் தேவ கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் நல்லதம்பி, மாவட்ட துணைத் தலைவர் கோதண்டராமன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் என 21 பெண்கள் உள்பட 40 பேர் கலந்து கொண்டனர்.
