- கிருஷ்ணகிரி
- சதீஷ்
- சின்னகவுண்டனஹள்ளி
- ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம்
- போஸோ
- பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் துறை
- நிலையம்
கிருஷ்ணகிரி, ஜன.10: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை சின்னகவுண்டனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(30). பெயிண்டரான இவர் மீது, பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 16.6.2025ல் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பேரில், கடந்த 12.8.2025ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், டிசம்பர் 24ம்தேதி ஜாமீனில் அவர் வெளியே வந்தார். மனவேதனையில் இருந்து வந்த சதீஷ், கடந்த 1ம்தேதி ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட் எதிரே உள்ள மதுபானக் கடைக்கு சென்று, மதுவில் விஷத்தை கலந்து குடித்து விட்டு கடை முன்பு மயங்கி சரிந்தார். அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இதுபற்றி ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
