ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் கோபுரம் மின்னொளியில் ஜொலிப்பது பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்த்தூர் ஆண்டாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஆண்டாள் கோயில் நுழைவுவாயில் கோபுரம், தங்க விமானம், பெரிய பெருமாள் கோயில் கோபுரம், விமானம், கோயில் வளாக பகுதியில் வண்ண மின்விளக்குகள் பொருத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
நேற்று மின்விளக்குகள் எரியவிடப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது மின்னொளியில் ஆண்டாள் கோயில் தங்க விமானம், கோபுரம் ஜொலித்தது. இது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. ஏற்பாடுகளை நிர்வாகி அதிகாரி சக்கரை அம்மாள் மற்றும் கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
