காரைக்குடியில் சரக்கு வாகனம் மோதி மின்கம்பங்கள் சேதம்: மின்விநியோகம் பாதிப்பு

 

 

காரைக்குடி: காரைக்குடியில் உயரழுத்த மின்கம்பங்கள் மீது சரக்கு வாகனம் மோதியதில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அண்ணாநகர் பகுதியில் இன்று அதிகாலை மீன்கள் ஏற்றிய சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் சாலையோரம் இருந்த உயர் அழுத்த மின்கம்பங்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில், அடுத்தடுத்து 2 மின் கம்பங்கள் உடைந்து வாகனம் மீது சரிந்து விழுந்தன.

மேலும், மின்வயர்கள் அறுந்து சரக்கு சாலை பகுதியில் சிதறி விழுந்தன. அப்போது அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

Related Stories: