தா.பழூர், ஜன.9: வேளாண்மை கல்லூரி மாணவர்கள் தென்னை விவசாயிகளுக்கு மேலாண்மை பயிற்சி அளித்தனர். அரியலூர் மாவட்டம் யுத்தபள்ளம் கிராமத்தில் உள்ள தென்னை விவசாயிகளுக்கு பஜன்கோவா வேளாண் கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் சங்கர், ஊரக தோட்டக்கலை பணி அனுபவ திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஆனந்தகுமார், திட்ட அலுவலர் சுந்தரம் ஆகியோர் ஒருங்கிணைப்பின் கீழ் விவசாயிகளுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், வேளாண் கல்லூரி மாணவர்கள் கார்த்திகேயன், பரத்வாஜ், பிரியதர்ஷன் ஆகியோர் தென்னை திரவ ஊட்டம் தென்னை மரத்திற்கு மகசூல் அதிகரிக்கும் எனவும், அதில் உள்ள நுண்ணுயிர்களின் செயல்பாடுகள், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, காண்டாமிருக வண்டு மற்றும் பனை வண்டு, பொறி மஞ்சள் ஒட்டு பொறியை பற்றி விளக்கமாக கூறினார்.
மேலும், அதன் தயாரிப்பு முறைகளை செயல் விளக்கமாக செய்து காண்பித்தனர். இதில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு மாணவர்கள் காதர் உசேன், லோகேஷ், மற்றும் நவீன் ஆகியோர் இணைந்து நடத்திக் கொடுத்தனர். முடிவில் மாணவர் அபிலேஷ்வரன் நன்றி கூறினார்.
