×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை தொடக்கம்

சென்னை, ஜன.9: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு, மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்து உள்ளிட்ட அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்க, கோயம்பேடு மார்கெட்டில் 7 ஏக்கரில் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு சந்தை வரும் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், வியாபாரிகள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வியாபாரம் செய்யக்கூடாது. அங்காடி நிர்வாகம் ஒதுக்கி தந்திருக்கும் பகுதியில் மட்டுமே வியாபாரம் செய்யவேண்டும் என அங்காடி நிர்வாக குழுகேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பொருட்களை எளிதாக வாங்கிச் செல்லவும் போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கோயம்பேடு சந்தை வளாகத்தில் உள்ள காலியிடங்களில் இந்த சிறப்பு கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதல் காவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மார்க்கெட்டுக்கு தெருவிளக்கு, குடிநீர், கழிப்பறை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசலின்றி வியாபாரம் மேற்கொள்ளும் வகையில் போலீசார் மூலம் நடவடிக்கை எடுப்பதோடு, அங்காடி நிர்வாகக் குழு ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்களும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என அங்காடி நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

Tags : Koyambedu Market ,Pongal festival ,Chennai ,
× RELATED குரோம்பேட்டை – ராதா நகர் இடையே ரூ.31.62...