சென்னை: மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மெரினா கடற்கரையில் கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மெரினாவில் உணவுப் பொருட்கள், பொம்மை, பேன்சி கடைகள் என 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இந்தியாவிலேயே சென்னை மெரினா கடற்கரையில்தான் அதிக கடைகள் உள்ளன. மெரினா கடற்கரையின் பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என நீதிபதிகள் வலியுறுத்தி மெரினா கடற்கரையில் கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கில் ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
