பொங்கல் பண்டிகை நெருங்குவதால் பொள்ளாச்சி வார சந்தையில் பந்தய சேவல் விற்பனை விறுவிறு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வார சந்தையில் இன்று பந்தய சேவல் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. பொங்கல் பண்டிகை நெருங்குவதால் கூடுதல் விலைக்கு சேவல்கள் விற்ப னையாகின. கோவை மாவட்டம் பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று வாரச்சந்தை நடந்தது. இந்த சந்தையின் ஒரு பகுதியில் பந்தய சேவல் விற்பனையும் நடந்தது. ஆனைமலை, கோட்டூர், நெகமம், வேட்டைக்காரன்புதூர், கோமங்கலம், வடக்கிபாளையம் மற்றும் உடுமலை, கனியூர், மடத்துக்குளம், பழனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பந்தய சேவலை விற்பனைக்காக அதிகளவில் கொண்டு வந்திருந்தனர்.

பொங்கல் பண்டிகை நெருங்குவதாலும் தொடர் விடுமுறை வருவதாலும் பந்தய சேவல் ஒன்று ரூ.1500 முதல் ரூ.12 ஆயிரம் வரை விலைபோனது. பந்தய சேவலை வாங்க அதிகாலை முதலே சந்தையில் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. சந்தைக்கு கொண்டு வரப்பட்ட பந்தய சேவலை, சுற்றுவட்டார கிராம பகுதியிலிருந்தும். பழனி, திண்டுக்கல், ஓட்டன்சத்திரம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்தும் வந்த பலர் போட்டிப்போட்டு வாங்கி சென்றனர். இதனால் பந்தய சேவல் விற்பனை விறுவிறுப்புடன் நடந்தது.

Related Stories: