×

திருச்சி உறையூர் பகுதியில் டாஸ்மாக் கடை பூட்டு உடைத்து திருட முயற்சி

திருச்சி, ஜன. 8: திருச்சி உறையூர் பகுதியில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் முத்துசெல்வம் (53). இவர் உறையூர் கோணக்கரை சாலையிலுள்ள டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணிபுரிகிறார்.

இந்நிலையில் ஜன.5ம் தேதி இரவு, இவரும் விற்பனையாளர் தனபால் என்பவரும் டாஸ்மாக் கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். பின்னர் மறுநாள் காலை துப்புரவு பணி மேற்கொள்வதற்காக, பார் ஊழியர் பாருக்கு வந்தார். அப்போது மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் ஷட்டர் பூட்டுகளை உடைத்து திருட முயன்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் உறையூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

 

Tags : Tasmac ,Uraiyur ,Trichy ,Muthuselvam ,Konakkarai Road ,Uraiyur… ,
× RELATED துவரங்குறிச்சி அருகே சாலையில் கவிழ்ந்த மணல் ஏற்றிய டிராக்டர்