திருத்துறைப்பூண்டி, ஜன. 8: பொங்கல் பண்டிகை நெருங்க உள்ளதால் திருத்துறைப்பூண்டியில் கரும்பு விற்பனை சூடுபிடித்துள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையில் கரும்பு முக்கிய இடத்தை பிடிக்கிறது. எவ்வளவு விலை விற்றாலும் கரும்பை யாரும் வாங்காமல் செல்வதில்லை.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கரும்பு விற்பனை களைகட்டியுள்ளது. கரும்பு கட்டு விலை ரூ.300லிருந்து ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் தங்களது உறவினர்களுக்கு சீர்வரிசை கொடுப்பதற்க்காகவும், தங்கள் சொந்த பயன்பாட்டிற்காகவும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
