வலங்கைமான், ஜன. 8:வலங்கைமான் வட்டாரத்திற்குட்பட்ட ஆலங்குடி ஊராட்சியில் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவம் பெறும் திட்டத்தின் கீழ் ஊரக பங்கேற்பு மதிப்பீட்டை நடத்தினர்.
கிராமத்தின் வரைபடம், பிரச்சனை மரம், கால அட்டவணை மற்றும் பயிர்கள், மக்கள் தொகை விகிதம், ஊராட்சியின் பரப்பளவு, விவசாயிகள் வகைப்பாடு போன்றவற்றை வரைபடங்களாக மாணவர்கள் வரைந்திருந்தனர். நிகழ்வில் ஊராட்சி செயலர் மற்றும் கிராம மக்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.
