தேவையான பொருட்கள்
ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய்
அரை தேக்கரண்டி விளக்கெண்ணெய்
சிறிதளவுவெந்தயம்
ஒரு பூண்டு
50 கிராம் சின்ன வெங்காயம்
சிறிதளவுகறிவேப்பிலை
அரை தேக்கரண்டி மஞ்சள் தூள்
ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள்
2 தேக்கரண்டி மல்லி தூள்
தேவையானஅளவு உப்பு
தேவையானஅளவு நீர்
2 தேக்கரண்டி புளி பேஸ்ட் அல்லது ஒரு எலுமிச்சம்பழம் அளவு புளி
அரைமூடி தேங்காய் அரைத்த விழுது
அரைக்க
ஒரு பெரிய தக்காளி
10 சின்ன வெங்காயம்
பணியாரத்திற்கு தேவையானவை
2 பெரிய வெங்காயம்
கால் தேக்கரண்டி மஞ்சள் தூள்
தேவையானஅளவு உப்பு
அரை தேக்கரண்டி மிளகாய் தூள்
சிறிதளவுமல்லி இலை
மூன்று முட்டை
தேவைக்கு ஏற்ப சமையல் எண்ணெய்
செய்முறை:
உணவு வகைகளில் செட்டிநாடு உணவு முறை மிகச் சிறந்த ஒன்றாகும் அதில் நாம் பணியார முட்டை குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். வானலியில் காய்ந்ததும் நல்லெண்ணெய் மற்றும் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டு அதில் வெந்தயத்தை பொறிய விடவேண்டும் பிறகு பூண்டு சின்ன வெங்காயம் சிறிதளவு கருவேப்பிலை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்த விழுதினை போட்டு அதையும் நன்றாக வதக்க வேண்டும் தேவையான அளவு நீர் விட்டு கிளறி விட வேண்டும்.2 தேக்கரண்டி புளி பேஸ்ட் அல்லது ஒரு எலுமிச்சம்பழம் அளவு எடுத்த புளிச்சாறு சேர்க்க வேண்டும் பிறகு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி கொதிக்க வைத்து இறக்கி விட வேண்டும்.இப்பொழுது பணியாரம் செய்ய முதலில் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும்.வெங்காயம் வதங்கியவுடன் அதில் மஞ்சள் தூள் காலத்திற்கேற்ப மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும். மல்லி இலைகளை சிறிதளவு போட்டு நன்றாக வதக்கிய உடன் அடுப்பை அணைத்து சிறிது ஆற விட வேண்டும். ஆறியவுடன் 3 முட்டைகளை உடைத்து அதனுடன் சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக்கொள்ளவேண்டும் பணியாரம் செய்ய. இப்பொழுது பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் குழிகளில் எண்ணெய் விட்டு நாம் கலக்கி வைத்த அந்த வெங்காயம் முட்டை கலவையை ஊற்றி பணியாரத்தை சுட்டு எடுக்க வேண்டும்
இப்பொழுது குழம்பு செய்த வாணலியை அடுப்பில் வைத்து அரைத்த தேங்காய் விழுதினை அதனுள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் செய்து வைத்த முட்டை பணியாரங்களை அந்த குழம்புடன் சேர்த்து லேசாக கொதிவந்ததும் இறக்கி வைத்தால் நமது பணியாரம் முட்டை குழம்பு தயார்.
