×

பொன்னமராவதி தாலுகாவில் 1,616 பேர் புதிதாக வாக்காளர் சேர்க்கைக்கு விண்ணப்பம்

பொன்னமராவதி,ஜன.7: பொன்னமராவதி தாலுகாவில் 1616 பேர் புதிதாக வாக்காளர் சேர்க்கைக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். பொன்னமராவதிபகுதியில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் முகாம் கடந்த மாதம் 27 மற்றும் 28 மற்றும் ஜனவரி 4மற்றும் 5ம்தேதிகளில் நடைபெற்றது.

பொன்னமராவதி தாசில்தார் சாந்தா தலைமையில் சமூகப்பாதுகாப்பு திட்ட தாசில்தார் பழனிச்சாமி, துணைத்தாசில் தார்கள் சேகர், திருப்பதி வெங்கடாசலம், ராம்குமார், வருவாய் ஆய்வாளர்கள் சரவணன், ஈஸ்வரி, கார்த்திகா மற்றும் தாலுகா அலுவலர்கள் மேற்பார்வையில் கிராமநிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், வாக்குச்சாவடி அலுவர்களாக பணியாற்றினர்.

116வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெற்றது. 4நாட்கள் நடைபெற்ற இந்த முகாமில் புதிதாக வாக்காளர்களுக்காக 1616பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர். மேலும் பெயர் திருத்தம் செய்ய 287பேரூம், 73பேர் நீக்கம் செய்யவும் விண்ணப்பித்துள்ளனர்.

 

Tags : Ponnamaravathi taluka ,Ponnamaravathi ,Tahsildar Chanda… ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி