பெண் தூய்மை பணியாளர் மீது அதிமுக நிர்வாகி தாக்குதல்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பெருமாள் கோவில் அருகே மாநகராட்சி பூ மார்க்கெட் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட பூக்கடைகள் உள்ளன. இப்பகுதியில் சேகரமாகும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றி வருகிறார்கள். இங்கு அதிமுக வியாபாரிகள் சங்கத்தலைவர் நல்லசாமிக்கு சொந்தமான பூக்கடை உள்ளது. அந்த கடையில் சேகரமாகும் குப்பைகளை நேற்று கடைக்கு எதிரே நடைபாதையில் கொட்டி விட்டு சென்றுள்ளார். இதனை பார்த்த தூய்மை பணியாளர்கள் இங்கு கொட்டக்கூடாது அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து கொட்ட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். இதில், ஆத்திரமடைந்த நல்லசாமி, தூய்மை பணியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு குப்பை கூடையால் லட்சுமி என்ற தூய்மை பணியாளரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சக தூய்மை பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டு கடையை முற்றுகையிட்டு பெருமாள் கோவில் வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக போலீசார், நல்லசாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: