ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு தேர்வு

சிவகங்கை, ஜன.7: கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில், ஒவ்வோரு ஆண்டும் குறள் வாரம் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது மாநிலம் முழுவதும் குறள் வார விழா கொண்டாடப்படவுள்ளது. அதன் ஒரு பகுதியாக வருகின்ற 21.1.2026 அன்று திருப்பூர் மாவட்டத்தில் குறளாசிரியர் மாநாடு, குறள் வினாடி வினா போட்டி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள சிவகங்கை மாவட்டத்தில் 15ஆசிரியர்கள் மற்றும் 15அரசுப் பணியாளர்கள் என மொத்தம் 30நபர்களை தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான எழுத்துத் தேர்வு நாளை மறு நாள் பிற்பகல் 2 மணியளவில் சிவகங்கை, அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இத்தேர்வில் கலந்துகொள்ளும் நபர்கள், தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தேர்வு நடைபெறும் இடத்திற்கு வருகை தரவேண்டும். தேர்வு குறித்த கூடுதல் விபரங்களுக்கு 97885 17857, 63817 08085 என்ற எண்களின் வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: