பொதுக் கூட்டங்கள், அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி அரசாணை வெளியீடு

சென்னை: பொதுக் கூட்டங்கள், அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அனுமதி பெறுவது, என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் உள்ளிட்டவை குறித்து விரிவான விபரங்கள் இடம்பெற்றுள்ளன.

* புதிய நெறிமுறைகளின்படி வரையறுக்கப்பட்ட இடத்தில் நிகழ்ச்சி நடத்த 10 நாள்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்

* அரசு பரிந்துரைத்ததற்கு மாற்றாக வேறு இடத்தில் நிகழ்ச்சி நடத்த 10 முதல் 30 நாட்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்

* 50,000க்கும் மேல் மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு 30 நாட்கள் அல்லது அதற்கு முன்பே விண்ணப்பிக்கலாம்

* ரோடு ஷோக்களுக்கு வழித்தடம், தொடங்கும் இடம், முடிவடையும் இடம், பேசும் இடத்தை விண்ணப்பத்தில் குறிப்பிடுவது கட்டாயம்

* ரோடு ஷோ தொடங்கும், முடியும் இடத்துக்கு விஐபி வரும், புறப்படும் நேரத்தை தெளிவாக விண்ணப்பத்தில் குறிப்பிடுவது கட்டாயம்

* ரோடு ஷோ நடக்கும் சாலை, விஐபி பேசும் இடத்தில் கூடும் மக்களின் எண்ணிக்கையை குறிப்பிடுவது கட்டாயம்

* நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே ரோடு ஷோ நடத்தப்படும் என்று எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும்

* மக்கள் பாதுகாப்பு, கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல் முற்றிலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் பொறுப்பு

* அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை மிஞ்சினால், கூட்டத்தை ஏற்பாட்டாளர்தான் கட்டுப்படுத்த வேண்டும்

* நிகழ்ச்சி முடிந்த பிறகு, அந்த இடத்தை சுத்தப்படுத்தி பழைய நிலையில் வழங்க வேண்டியது ஏற்பாட்டாளரின் பொறுப்பு

* நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு, காவல்துறை வாகனங்கள் எளிதாக செல்வதை உறுதி செய்ய வேண்டும்

* ரோடு ஷோக்களை 3 மணி நேரத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும்

* எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையை விட 50% கூடுதலாக கூட்டம் இருந்தால் விதிமீறலாக கருதப்படும்

* அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட 50% கூடுதலாக கூட்டம் இருந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும்

* நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு மட்டுமே பார்வையாளர்கள் கூட முடியும்

* கர்ப்பிணி, முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் நீண்ட நேரம் நிற்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

* பேரணி செல்லும் போது சாலையின் ஒரு பாதியை மட்டுமே பயன்படுத்த முடியும்.

* கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மிகவும் நெரிசலான கூட்டத்தில் பங்கேற்காததை உறுதி செய்க

* எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெறாமல் ரோடு ஷோக்களை மாற்றுப் பாதையில் நடத்த இயலாது

* கூட்டத்தை ஒழுங்குபடுத்த ஒவ்வொரு 50 நபருக்கும் ஒரு தன்னார்வலரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நியமிக்க வேண்டும்

* நிர்ணயிக்கப்பட்ட இடத்தை தவிர, வேறு எங்கும் வி.ஐ.பி. உரையாற்றக் கூடாது

* 500 பேருக்கு ஒரு கழிப்பறை, 300 மீட்டர் அளவில் ஒரு நடமாடும் கழிப்பறை ஏற்படுத்த வேண்டும்

* ஒரு நபருக்கு 4 லிட்டர் குடிநீர், ஒவ்வொரு 100 மீட்டருக்கும் குடிநீர் வசதியை ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்ய வேண்டும் இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: