×

புதுவையில் நூதன முறையில் 3 பேரிடம் பணம் மோசடி

 

புதுச்சேரி, ஜன. 6: புதுவையில் நூதன முறையில் 3 பேரிடம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி நெட்டப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆண் நபர் ஒருவரை, மர்ம நபர் ஒருவர் வங்கி அதிகாரி பேசுவதாக கூறியுள்ளார். மேலும், கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்த, வங்கி விவரங்களை வழங்குமாறு கூறியுள்ளார். இதனை நம்பி மேற்கூறிய நபர், தகவல்களை வழங்கிய சிறிது நேரத்தில் அவரது கணக்கிலிருந்து ரூ.24 ஆயிரத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது. மேலும், அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்த ஆண் நபர் ரூ.15 ஆயிரமும், முதலியார்பேட்டை சேர்ந்த ஆண் நபர் ரூ1,700 மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர். மேற்கூறிய நபர்கள் மொத்தமாக ரூ.40,700 மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர்.இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Puducherry ,Puducherry Cyber Crime Police ,Nettappakkam ,
× RELATED மொபட்டில் சென்ற பெண்ணிடம் மர்ம ஆசாமிகள் நகை பறிப்பு