சென்னை : தனது பிறந்தநாளையொட்டி திமுக எம்.பி. கனிமொழி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் சுனிமொழி எம்.பி.. இதனிடையே கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “பெண்ணுரிமைக்காகவும் தமிழ்நாட்டின் தன்னுரிமைக்காவும் நாடாளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை மொழி – என் பாசத்திற்குரிய தங்கை, கழகத் துணைப் பொதுச்செயலாளர் – நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!”இவ்வாறு தெரிவித்தார்.
அதே போல் காதர் மொகிதீன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் – நம் அனைவரின் மரியாதைக்குரிய ‘தகைசால் தமிழர்’ பேராசிரியர் காதர் மொகிதீன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! பத்திரிகையாளர், பேராசிரியர், நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பலநிலைகளிலும் சமூகத்துக்குப் பங்களித்து, மதநல்லிணக்கத்துக்காகத் தொடர்ந்து உழைத்து வரும் தாங்கள் நீண்டகாலம் நலத்துடன் திகழ விழைகிறேன்.’இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அதில், “மதச்சார்பின்மையை நிலைநிறுத்தி, மாநிலம் அனைவருக்கும் சமம் என்பதை உறுதி செய்துள்ளீர்கள். அணுகுமுறை, அரசியலமைப்பு விழுமியங்களையும் சமூக நல்லிணக்கத்தையும் தொடர்ந்து வலுப்படுத்தட்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.
